மா.காளிதாஸ்

தமிழ்நாட்டின் மதுரை மாநகரைச் சார்ந்த மா.காளிதாஸ், (50) வணிகவியல் ஆசிரியராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். இதுவரை வெளிவந்துள்ள கவிதை நூல்கள்: 1.சந்திப்பின் கடைசி நொடியில் (1998) 2.அட்சதை (2000) 3.பிம்பங்களின் மீது ஒரு கல் (2003) 4.திருடனின் வீடு (2015) 5.பெருஞ்சொல்லின் குடல் (2020) 6.ரகசியங்களின் புகைப்படம்(2021) 7.மை(2021) 8.நீ பாரித்த என் உதடுகள்(2022) பெற்ற விருதுகள் : 1.செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு (தமுஎகச) - 1999 2.கவிச்சுடர் விருது (படைப்பு குழுமம்) - 2019. செயல்பாடுகள்: கவிதை எழுதுதல், நூல் விமர்சனம் செய்தல் (கதை, கவிதை, நாவல்), ஹைக்கூ தொடர் (முகநூல்) பெண் கவிஞர்களின் நவீன கவிதைகள் - கட்டுரைத் தொடர் (முகநூல்) கவிதை வெளிவந்துள்ள இதழ்கள் : காலச்சுவடு, கணையாழி, உயிர்மை, உயிரெழுத்து, புதிய பார்வை, புரவி, பேசும் புதிய சக்தி, ஆவநாழி, இலக்கியவெளி(கனடா), செம்மலர், மணல்வீடு, தாமரை, கனவு, தினமணிக் கதிர், ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், சுதேசமித்திரன். இணைய இதழ்கள் : கொலுசு, தகவு, கல்வெட்டு, காற்றுவெளி
1. விரைவஞ்சலில் வந்த பொட்டலத்தை ஆர்வத்துடன் அவசரமாகப் பிரிக்கிறீர்கள் எளிதில் உடைந்துவிடாதபடி கவனமாகக் கட்டுமம் செய்யப்பட்ட முழுநீளப் புன்னகையே...