கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
நதியின் அடுத்த பிறவி கண்ணுக்கு புலனாகாத புதிர் ஒன்றாய் அரூபக் குரலில் உச்சரிப்பாய் மின்னலுக்கு பளிச்சிட்டு மறைந்து கொள்ளும்...
மனுஷப்பய பெரியவனுக்கு இருப்பதிலேயே பெரிய அறை சின்னவள் ரசனைக்காரி கலர் கலர் பூக்களோடு பூந்தோட்டம் மாதிரி அம்மாவுக்கும் அப்பாவுக்கும்...
சிலுவைக்கால் யாத்திரை பெருங்கூட்டங்கள் அவன் கண்ணில் விழுவதில்லை கார்காரர்களையோ கூலிங்க்ளாஸ் அணிந்தவர்களையோ அவன் கவனிப்பதில்லை அதேநேரம் றோஸ் வண்ணம்...