கரிகாலன்

கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்த கரிகாலன்; தொன்னூறுகளிலிருந்து தமிழிலக்கியத்தில் இயங்கிவருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் எழுதிய சில கவிதைப் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘களம் புதிது’ என்னும் இதழை நடத்தியுள்ளார். அப்போதிருந்த இடைவெளியில், புலன் வேட்டை, தேவதூதர்களின் காலடிச் சத்தம், இழப்பில் அறிவது, ஆறாவது நிலம், அபத்தங்களின் சிம்பொனி, தாமரை மழை ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கரிகாலன் கவிதைகள்’ தொகுப்பாக உயிர் எழுத்து வெளியீடாக வெளிவந்துள்ளன. ‘நிலாவை வரைபவன்’ என்னும் நாவல் உள்பட பல படைப்புகளை எழுதியுள்ளார். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுதுதல் என்பதே புதுமை செயல்பாடுதான். தமிழ் போன்ற கனிந்த மொழியில் எழுதுவோருக்குப் புதுமை செய்யும் வேட்கை அதிகம். அது...
மணிமுத்தாற்றங் கரையில் வீற்றிருக்கிறான் சிவன். குடமுழுக்கெல்லாம் முடிந்து எட்டிப்பார்த்தேன். வழக்கமாக சிவத் தலங்களின் கருவறை இருளாக இருக்கும். இங்கும்...
சமீபமாக பாமரர் vs அறிவுஜீவி வாதங்களைக் காண்கிறேன், கேட்கிறேன். கருத்தியல் அடிப்படையில் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், சனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் மட்டுமில்லை....