cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 10 உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 8


ம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன  எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம்.  சென்ற இதழ்களில் சில கவிஞர்கள் பங்களித்தார்கள். இந்த இதழில் கவிஞர்கள் அம்மு ராகவ், ரம்யா அருண் ராயன் ஆகியோர் அளித்த பதில்கள் இதோ..!

அம்மு ராகவ் :

  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

பள்ளிக்காலத்தில் வார இதழ்களில் வெளிவரும் ஹைக்கூ கவிதைகள் பிரபலமாக இருந்தன. அதைப் பார்த்து, பன்னிரண்டு வயதில் சில ஹைக்கூ கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அதுதான் தொடக்கம். நோட்டுப் புத்தகங்களிலும் டைரிகளிலும் எழுதியவை. அந்த வயதில் பாதுகாத்து வைக்க வேண்டுமென்று தோன்றாததால் தொலைந்து விட்டன. இப்போது எதுவும் நினைவிலில்லை.

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 

தினமலர்- வாரமலரில் எனது கவிதை முதன்முதலில் பிரசுரமானது.

  • முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ? 

எழுதுவேனே தவிரப் புத்தகம் வெளியிட வேண்டுமென்ற எண்ணமோ திட்டமோ எதுவும் இல்லாத காலத்தில் அதவாகக் கூடி வந்தது. Be4books (யாவரும் பதிப்பகம்) எனது முதல் கவிதைத் தொகுப்பு “ஆதிலா”-வை வெளியிட்டனர். முதல் குழந்தையைக் கையில் ஏந்துவதைப் போன்ற உணர்வு.
அன்றில் இலக்கிய சுற்றம் பேராசிரியர்.மானசீகன் முன்னிலையில் எழுத்தாளரும் திரைக்கலைஞருமான திரு.மீரான்மைதீன் வெளியிட என் தந்தை பெற்றுக்கொண்டார். மறக்க முடியாத மகிழ்ச்சியான நிகழ்வு.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

தினமலர் திருச்சி பதிப்பின் ஆசிரியர் திரு சேது நாகராஜன் சார் அவர்களிடமிருந்து.. !

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
தேனி மாவட்ட அரிமா சங்கம் சார்பாக இலக்கிய சுடர் விருது.
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கும் கருப்பு கருணா நினைவு விருது.
  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

முதன்முதலில் வாசித்தது கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகளை.., அவர் எழுதிய அனைத்து கவிதைகளும் பிடிக்கும்.


ரம்யா அருண் ராயன் :

  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

19- ஆம் வயது.

அழகின் சிரிப்பு என்ற பாரதிதாசன் கவிதை கல்லூரி இரண்டாம் ஆண்டில் பாடப்பொருளாய் இருந்தது. அதேபோன்று அழகென உணரும் விஷயங்களை, எங்கள் பேராசிரியர் எங்கள் அனைவரையும் எழுதிவரப் பணித்தபோது எழுதினேன். அத்தனை கவிதைகளிலும் இருந்து என் கவிதையைத் தேர்ந்தெடுத்து மிகவும் பாராட்டினார். அன்றுதான் கவிதை எழுதும் ஈடுபாடு எனக்குள் விதைக்கப்பட்டது. ஒரு வரி மட்டும்தான் நினைவிருக்கிறது. “பெண்ணின் பின்னே பெண்டுலம் போலாடும் கூந்தல் அழகு”

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 

தினமணி

  • முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ? 

வாசகசாலை பதிப்பகம் மூலமாக  “செருந்தி” என்னும் முதல் தொகுப்பை சமீபமாகத்தான் வெளியிட்டிருக்கிறேன். இப்போதுதான் பறக்கத் துவங்கியிருக்கும் வலசைப் பறவையாய் பறத்தலின் சுகத்தை உணர்கிறேன். இன்னும் அடைய வேண்டிய தூரம் ஏராளம் இருப்பதாய் நினைக்கிறேன்.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

பரிசுகளைவிட, ஒருவர் தன் உணர்வுகளை ஒரு கவிதை அசைப்பதாகக் கூறுவதே  அக்கவிதையின் ஆகச்சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். புலம் பெயர்ந்தவர்கள் பற்றி நான் எழுதிய கவிதையொன்று, என் பிறந்த ஊர்விட்டு புலம்பெயர்ந்த பலரை என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. அதையே முதல் அங்கீகாரமாகச் சொல்வேன்.

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?

விருது எதுவும் இதுவரை பெறவில்லை

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

தண்ணீர் தேசம்வைரமுத்து

புதினங்களை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட புதினமாக இருந்த தண்ணீர் தேசம், என் வாசிப்பைக் கவிதைகள் பக்கம் திருப்பக் காரணமாய் இருந்தது

 “ஓர் ஆணியைச் சுயமாய்

அடிக்கத்தெரியாதவளுக்கு

வெள்ளிக்கரண்டி

சொந்தமாய் இருக்கக்கூடாது

அனுபவங்கள் தடுப்பூசிகள்

போட்டுக்கொள்.”

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website