கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர். இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர். 2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார். Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார். ‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார். இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை: ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019), கோமாளிகளின் நரகம் (2019), -என மூன்று கவிதைத் தொகுப்புகளும் பனிக் குல்லா (2017), மோகன் (2019), -என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும், திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
நிலைக்குத்தும் மௌனத்தோடு.. புழுங்கும் அறைக்குள் என்னை விழுங்கும் சொல்லைத் தந்து செல்கிறாய் கொஞ்சங்கொஞ்சமாய் நீலம் பாரிக்கிறது அதன் உடல்...
இந்த நிமிடம் சீக்கிரமே முடிந்து போய்விட வேண்டும்.. எவ்வப்போதுக்குமான மௌனத்தை அறிந்துகொள்ள பழக்கப்படுத்தியிருக்கிறாய் அதனை சுலபமாகக் கடந்துவிட முடிந்ததில்லை...
வேறெங்கோ.. குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தபோது நீ கிடைத்தாய் மட்கி போயிருந்தாய் விரல் நுனி பட்டாலே நொறுங்கிவிடும் உன் பெயர் மீது...
பறப்பதற்கான யோசனைகள் எதுவுமில்லை நெடுஞ்சாலையோரம் கண்டெடுத்த சிறு கல்லை அதிலுள்ள கரடுமுரடான பாதைகளை மறக்கவியலாத இவ்விரவின்மீது அழுந்தத் தேய்த்து...
அதற்குப் பிறகான காலத்தில்.. மேஜையில் விட்டுப் போயிருக்கிறாய் ஒரு சிறிய ஞாபகத்தை அதன்மீது கனமான சொல் ஒன்றை எடுத்து...
ஆனால்..  நாம் எப்போதைக்கும்  வெறுமனே  உட்கார்ந்தபடியும்  நம் காயங்களை வெறித்தபடியும் இருந்திட முடியாது.. -ஹருகி முரகாமி (ஜப்பானிய எழுத்தாளர்)...
வாசித்திருக்க வேண்டாத புதிர்களினூடே.. உணரப்படுவதற்கோ கேட்கப்படுவதற்கோ குறைந்தபட்சம் சில பொழுதுகள் தவறவிடுவதற்கோ தொலைந்துபோவதற்கோ அதிகபட்சம் ஒரு நம்பிக்கை இம்முனையிலிருந்து...
உண்மை என்பது, உருவமைப்பிற்குரிய துல்லியத் தன்மைகளின் துல்லியமற்ற பிரதிபலிப்பு. –பிளேட்டோ (கிரேக்க தத்துவ ஞானி) 428-348 BC  ...
டபுள் டிக் என்பது புறவாசல் அல்ல முட்டிக்கொண்டு உடைந்து உருளும் கண்ணீர்த்துளிகளில் முந்தைய இரவின் நிறம் மங்குகிறது வந்திருக்கலாம்...
மீன்கள் மேயும் விரலிடுக்கு எங்கோ ஆழத்தில் பிரபஞ்ச தவிப்புடன் முகிழும் அன்பின் மையம் கருக்கொண்டிருப்பது ஒரு கேலக்ஸியை முன்னும்...