cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

பிரதீபா சிவகுமார் கவிதைகள்


ரு கண்கள் ஜாடை பேசிக்கொள்ளும்
கைகளும் சில நேரம்
உரசிக் கொள்ளும்
அருகில் வரக் கால்கள் நடுங்கும்
ஆளில்லாத நேரம் தடுக்கியும் போகும்.

அவளுக்கு அவன் மீது காதல்
அவனுக்கு அவள் மீது காமம்.

அவன் பேச்சின் அசைவுகள்
அவன் புன்னகையின் அதிர்வுகள்
அவன் கேசத்தின் சரிவுகள்
அவன் வெட்கத்தின் மௌனங்களை
அவள் மெது மெதுவாய் களவாட,

அவள் உடைகளின் நீளங்கள்
உள்ளாடைகளின் நிறங்கள்
டிஷூ வைக்க மறந்த நிப்பிள் அடையாளங்கள்
வழித்து சவரம் செய்த
வழுவழுப்பு கால்கள்
பார்த்ததும் பளிச்சிடும்
உதட்டுச் சாயங்களை
இவன் களவாட,

முரணான இரு திசைகள்
முட்டி மோதி ஒன்றையொன்று
தன்வசம் ஈர்த்துக்கொள்கின்றன.

தயாராகாத நாட்களில்
தாகம் அதிகம் .

அதிவேக பாதையில் அதை விட வேகமாய் பறந்தனர்
ஓர் சென்சேஷன் மிக்ஸூடன்
மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருக்க
காரின் கதவுகள் அதிர்ந்த வண்ணம் இருந்தன.

எங்கும் அமைதி
கவனம் சிதறவில்லை
ஒரே படபடப்பு

கைகளுக்கு பலம் சேர்ந்தன
தொடைகள் நடுங்கின
வில்லை விரலால் வருட
‘ஹா’ என்று சப்தம் கேட்டது.

மீட்டாத இசை எங்கும் பரவியது.

கைக்குலுக்கிய பின்
குலுக்கிய கைகளுக்கு முத்தமிட்டாள்
எச்சில் உலராமல் இருந்தது.

மென்மையானது நீண்டு உழைக்கும்
வன்மையானது நிலையாது
ஒழியும் .

நாக்கின் நுனி
பெரும் ஆயுதம் ஆகியும்
இவர்கள் பற்களைத் தான் பத்திரப்படுத்தினர்.


தனால் தான் உன்னைச்
சந்திக்க மறுக்கிறேன்
ஒரு முத்தத்தோடு நிறுத்தி விடுவதாக இருந்தால் உள்ளே வா
இல்லாவிட்டால் கதவைச் சாத்தி விட்டு வெளியே போ
எத்தனை நாள் படபடப்போடு கள்ளத்தனம் செய்வது .

இன்று நாளை என்று
நாட்களை நகர்த்துகிறாய்.

சரி முத்தத்தைத் தவிர எனக்கு எந்த அனுமதியும் வேண்டாம்
நீ கண்ணை மட்டும் மூடிக்கொள்
நான் உன்னைக் கனவு உலகைக்
காணச்செய்கிறேன்.

உச்சந்தலையில் முத்தமிடுகிறாய்
ஒரு பனிப்பாறை வெயில் பட்டு உருகிவிடுவதைப் போல்
மொத்தமாய் கலைந்து விடுகிறேன்.

இமைகளின் மேல் இமை அசைத்து
இதுதான் பட்டர்ப்ளை கிஸ் என்கிறாய்
இலட்ச பட்டாம்பூச்சிகளின் படபடப்பு
என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

நுதலில் இதழ் பதித்து நெற்றி முத்தம் என்கிறாய்
மொத்த குருதியும் உறைந்து போவதாய் உணர்கிறேன்.

கன்னக்குழியில் முத்தம் வைக்க
மின்னல் ஒளி பட்ட ஜன்னல் கதவாய் மெய் சிலிர்த்துப் போகிறேன்

வாயோடு வாய் வைத்து
உதட்டைக் கவ்வி லாக் செய்து மேஜிக் என்கிறாய்
சுவாசம் திணறும் போது
வாய்வழி உயிர் பாய்ச்சி
பிரெஞ்சு கிஸ் என்கிறாய்.

மூக்கு நுனியால் என் மூக்கை உராய்ந்து
எஸ்க்கிமோ கிஸ் என்கிறாய்
சிரிப்பை விழுங்கி அண்ணாந்து பார்க்கிறேன்

கழுத்து மடிப்புக்களில்
அடுக்கடுக்காய் முத்தம் வைத்து
கழுத்து முத்தம் என்கிறாய்.

வற்றியிருக்கும் தோள்பட்டை
வளைவில் வற்றாமல் முத்தம் வைத்து
சோல்டர் கிஸ் என்கிறாய்.

மெதுவாய் கீழிறங்கி
மென்மையாய்
மார்பில் இதழ் வைத்து
நிப்பிள் கிஸ் என்கிறாய்
மார்பின் கீழ் படர்ந்திருக்கும்
வியர்வை துளிகளை
விரல்களால் சுண்டி விட்டு
சாகசம் செய்கிறாய்.

கைகளை உயர்த்தி பிடித்து
அக்குளுக்குள் முத்தம் வைக்கிறாய்
மறுக்கும் என்னைப் பார்த்து
உன் வியர்வை மனம் எனக்குப் பிடிக்கும் என்கிறாய்.

தொப்புளில் முத்தமிட்டு
தீப்பிழம்பில் நீர்த்துளி போல் மாயம் செய்கிறாய்.

பின்னியிருக்கும் கால்கள் விரித்து அங்கொரு முத்தமிடுகிறாய்
எஞ்சியிருக்கும் நாணங்கள் எல்லாம்
கண்மூடிக் கொள்கின்றன.

கால் முட்டின் உட்புறம்
முத்தம் வைக்கிறாய்
மொத்த கர்வமும் நிலைகுலைந்து
நீயே கதி என்கிறேன் .

விரல்களில், நகங்களில், பாதங்களில்
முத்தம் வைக்கிறாய்
வரம் கொடுத்த பெண் கடவுளாய்
சிலையாகிப் போகிறேன்.

இப்போது கண்களைத் திறக்கலாம் என்கிறாய்
மறுபடியும் இரண்டு இதழ்கள்
நான்கு கண்கள் ஒன்றை ஒன்று
ஈர்த்துக் கொண்டன.

இனி உனக்கும் முத்தத்திற்கும் அனுமதியில்லை போ !


விரைவில்  ‘கடல் பதிப்பகம்’ வெளியீடாக வெளியாக இருக்கும் ” தீராக் காதல் தீராக் காமம்” தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள்  .

Arts- Courtesy : Livesmart.com

About the author

பிரதீபா சிவகுமார்

பிரதீபா சிவகுமார்

இலங்கையில் கொழும்புவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பிரதீபா சிவகுமாரின் கவிதைகள் முகநூலில் பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முதல் கவிதைத் தொகுப்பு " தீராக் காதல் தீராக் காமம்" கடல் பதிப்பக வெளியீடாக அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
மதியழகன்

இத்தனை நளினத்துடன் துணிச்சலுடன் அழகியலாக எழுதி இருக்கிறார் இவர். இவரின் நூல் தொகுப்பு வெளியானால் தெரிவிக்கவும்

David

யாருங்க இவங்க. நல்லா இருக்கு

You cannot copy content of this Website