வந்தவர்களெல்லாம்
காத்திருந்தார்கள்
மடக்கென்று விழுங்கக்
கவளத்தில் பாலோடு
பிடிகளற்ற கோப்பை
எனதருகில் சொட்டியும்
நானதை நக்கியும்
ஒன்றுமில்லை
குரல்வளையின் மீது
காலனின் கால்
காலராட்டினத்தில்
கையசைத்தபடி
இளகிக் கொண்டிருந்தது
அம்மணமாய் வெறுமை
நேரம் குறித்த அகால மரணத்திற்கு
முன் இறைத்துக் கொண்டிருந்தேன்
ஒரு கோப்பை மூத்திரம்
பிறகென்ன
நிகழ்ந்திருக்கும்
அப்பாடா
என்ற பின் இறந்திருப்பேன்.
அவ்வாகாயத்திற்கும் அவ்வளிக்கும்
மேலான ஒரு மேல் உண்டா
அவற்றின் மீது
சம்மணமிட்டு அமர்ந்திருக்கக்
கடவுகிறேன்
ஞானி எனப் பூஜித்தாலும்
பித்தன் எனத் தூற்றினாலும்
மனிதத் தொடர்புகளற்ற
அண்டப் பெருவெளியை
இறைஞ்சியது பேருள்ளம்
சகல உயிர்களின் இரைச்சலில்
ஞானம் கலைந்து
கண் திறவாக்கலாயினேன்
நிர்வாணத்தின் நிழலில்
போதி மரத்தில் தூக்கிலிட்டபடி
“யனக்கும் மேல் நூறு பேர்
குழந்தையை அதட்டி
தேரில் அமர்ந்திருக்கும்
சாமியைப் பார்
அருள் கிடைக்குமெனச்
சமாதானம் செய்கிறாள் அம்மா
அதையேனும் வைத்து
“ஒரு பலூன் வாங்கித்தாயேன்”
என்கிறது குழந்தை
அக்கணமே
“காற்றாய் உடைந்தான் கடவுள்
கீழுடல் பறவை
அந்த குருதியிலிருந்து
ஓர் விருப்ப உணவைப்
புசிக்கிறீர்கள்
அதன் உபக்கருவிகளாய்
சில குறுவாள்களும்
சில வெட்டுக்கத்திகளும்
சில அரிவாள்மணைகளும்
இறுக்கியும் நெருக்கியும்
முத்தமிட்டும் கைப்பிடித்தும்
கொண்டதில் காயமுறுகிறேன்
தேற்றுவதாகச் சொல்லி
ஆற்றுவதற்கு ஓர் ஓளடதம்
தர முயன்றார்கள்
அடுத்த இரவின் பசியைச்
சொல்லிக்கொண்டே
பூசிய ஓளடதத்தின் மீது
ஆறாமல் விழுந்தது ஓர் முத்தம்.
பலூன் கவிதை அழகாக இருந்தது
கவி கோ பிரியதர்ஷினியின் கவிதைகள் அழகானவை.