இதென்ன எல்லாம்
புதிதாய் இன்று
காலையில் கண் விழித்ததும்
கண்ணெதிரே
அவள் கனவில் தினம் வருபவன்
கடற்கரை மணலில்
காலார நடைபோட
கால் தடங்கள்
இரண் டிரண்டாய்
அவள் கை கோர்த்து
அவன்.
மனதோடு உரையாடிய
வார்த்தைகளெல்லாம்
இதழோடு உறவாட
அவள் எதிரிலே
அவன்
கற்பனையில் கரைந்த
நொடி எல்லாம்
கண் முன்னே நிகழ்ந்திட
அவள் நிழலாக
அவன்
தனிமையைச் சுவாசித்தவள்
காதலை வாசிக்கிறாள்
பெருங் காதலாய்
அவளருகே அவன்!!!!
புனிதமெல்லாம் பெண்ணென்று
அவன் பாவமெல்லாம்
தாங்கச் செய்தான்
கற்பை பெண் உடைமையாக்கி
அதை அழிப்பதை
ஆண் உரிமையாக்கினான்
ஆண்மையின் வெறி
தீர்க்க பெண்ணுறுப்பு
தேடுபவன் உணர்வதென்று
அது அவன் பிறந்த உறுப்பென்று
குழந்தைக்கும் குமரிக்கும்
வேற்றுமை உணர்கையில்
அவன் காமம் மையமிடுவது
அவள் கால்களுக்கு இடையில்
தோல் சுருங்கிய கிழவியிடமும்
கலவி தேடுபவன் உணர்வதில்லை
அவளும் ஓர் தாயென்று
பெண்ணின் ஆடையை
குறை கூறும் கண்கள்
தொலைவ தென்றுமே
கழுத்தின் கீழ் தான்
முக்காடிட்டு நடந்தாலும்
பார்வையாலே துயிலுரிக்கும்
துச்சாதனன்கள் ஆயிரம்
ஆடையுடன் அலைவதால் தான்
அவிழ்த்திடும் ஆசை கொண்டீர்
அம்மணமாய் அலைந்தாலேனும்
வெறும் சதையென்று உணர்வீரோ!!!