cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

அம்மாவின் பாடல்

கண்ணன்
Written by கண்ணன்

‘கற்பூர நாயகியே..’
கைவேலை நின்று
கனகவல்லி ஆவாள்
‘அழகிய கண்ணே உறவுகள் நீயே’
பெட்டி அருகில் நிற்பவள்
அஸ்வினி ஆகிப்போவாள்
நகரப் பறவை ஒன்று
சிறகொடிக்கப்பட்டு
கிராமத்துக் கூண்டில்
மனசின் ரணத்திற்குப்
பாடல்கள் களிம்பு
தண்ணீரெனில் அத்தனைப் பிரியம்
குழந்தைகள் தோற்றுப் போகும்
பிறிதொரு நாளில்
பெருந்தாகம் கொண்டு
நதியெல்லாம் குடித்து
கவர்மென்ட் பிணவறையில்
ஊதிப் பெருத்தபடி
கண்டடைந்தோம்
அம்மாவை
அஸ்தி கரைத்த நதியின்
நீர்குடித்த நாணல்களும்
சட்டி புதைத்த
வில்வமும்
சற்றே கவனித்தால்
பரவும் பாடலுக்கு
இன்னமும் தலையாட்டும்
‘கற்பூர நாயகியே’.


 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website