புரிதல்களின் தேடலில்
உனக்குத் தெரிந்தவை
யாவும்
எனக்குத் தெரிந்திருக்க
நியாயம் இல்லை
எனக்குத் தெரிந்தவை யாவும்
உனக்குத் தெரிந்திருக்க
நியாயம் இல்லை
ஆனால்
நம் இருவருக்கும் தெரியாதவைதான்
தெரிந்தவைக்குள்ளும்
இருக்கின்றன.
இருட்டு
இருட்டாக இருக்கும்வரை
எனக்கொன்றும் பிரச்சனை இல்லை
இருட்டு
வெளிச்சம் ஆகும்போதுதான்
பிரச்சனையாகி விடுகின்றது.
எனக்கு மட்டுமல்ல
உங்களுக்கும்தான்
வெளிச்சம் உங்களை
வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவதால்
உங்கள் மீது இருக்கும்
“எனது” பிம்பமும் உடைந்து விடுகின்றது.
கடைசியாகப் பார்த்த
பொழுதில்
என்னைச் சந்திக்க
ஒரு நாள்
நேரில் வருவதாக
நீங்கள் சொன்னது
இன்னும்
நினைவில் இருக்கிறது
காலங்கள்
கடந்த பின்னரும்
நீங்கள் அதை
மறந்திருக்கலாமோ
அல்லது
சந்திப்பதை
தவிர்த்திருக்கலாமோ
என்பது பற்றியெல்லாம்
எனக்குக்
கவலையே இல்லை.
உங்கள் மேல்
வைத்திருக்கும்
நம்பிக்கையை
நான் காப்பாற்றியே
ஆகவேண்டும்.
கடைசியாகப் பார்த்த
பொழுதில்
என்னைச் சந்திக்க
ஒரு நாள்
நேரில் வருவதாக
நீங்கள் சொன்னது
இன்னும்
நினைவில் இருக்கிறது
காலங்கள்
கடந்த பின்னரும்;
நீங்கள் அதை
மறந்திருக்கலாமோ
அல்லது
சந்திப்பதை
தவிர்த்திருக்கலாமோ
என்பது பற்றியெல்லாம்
எனக்குக்
கவலையே இல்லை
உங்கள் மேல்
வைத்திருக்கும்
நம்பிக்கையை
நான் காப்பாற்றியே
ஆகவேண்டும்.