நீலவானின் அடர்மின்னலுக்கு
இன்னுமான மிச்சங்களென
ஒத்திகை நடந்தாயிற்று!
இரவின் இரகசியம்
உலாவிக் கொண்டிருக்கையில்
மீட்டாத என் வீணையின்
மெல்லிய நரம்பினை
அந்துபூச்சுக்கு
அமரக்கொடுத்துவிட்டு
ஆசுவாசமடைய
ஒத்திகையின்
மெல்லிய நாதங்கள்
பதற்றமற்ற
என் இரவின் இமயத்தில்
இரகசியத்தின் ஆதாரங்களை
இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது
மிக லேசாய் அடைக்கப்பட்ட
நீள் சதுர சாளரங்கள் வழி வந்துக்கொண்டிருக்கும்
ஐந்தாறு வின்மினிகள்தான்
ஒத்திகைக்கான
அடர் இருளின்
முலாம் பூசப்பட்ட
அறைக்கு மாட வெளிச்சம்!
ஒத்திகையின் நாதங்களும்
இன்னுமான மிச்ச இருளில்
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.