சொற்தழல்
மழைத்துளி கோர்த்துக்
குதிக்கும்
தனிமை சொட்டும்
அனல் குமிழின் முகத்தில்
அவரவரின்
கண்ணாடி முகங்கள்
தேநீராவியின் கொண்டையூசி
வளைவுகளில்
தொண்டைக் குழிக்கு
எப்பக்கமாவது
துடிதுடித்தபடி
சேரா ஞாபகங்கள்
மெய்யெழுத்து
நெற்றிப் பொட்டில்
அரும்பி
ஜிம்னோஸ்பெர்ம் கவிதைகளுக்குள்
ஆஞ்ஜியோகிராம்
நிகழ்த்திவிடுகிறாய்.