செவித்திறனுக்கு அப்பாற்பட்ட
மென்சத்தத்தில்
மொழித்திறனுக்கு அப்பாற்பட்ட
அடர்வார்த்தைகளால்
பெருங் கருணையோடு
ஓயாமல் உங்களுடன்
பேசிக் கொண்டேதானிருக்கிறது
இந்தப் பிரபஞ்சம்..
நீங்களதைக்
கேட்டுப் புரிந்துகொள்ள..
உங்கள் செவிச் சவ்வுகளின்
கிழிசல்களையும்
மூளை மடிப்பணுக்களின்
சுருக்கங்களையும்
சரி செய்யுங்கள்..
முடியாவிட்டால்..
வெம்மையுமிழும்
பகற் பொழுதுகளில்
மொட்டை மாடியில்
ஒரு கிண்ணத்தில்
கொஞ்சம் நீர் வையுங்கள்
போதும்..