சுமைகூடிப்போன
சொல்லொன்று
தொண்டைக்குழி தொக்கி நிற்கிறது..
செரிக்கவோ சிதறிடவோ
முடியாதபடி..
விடியலில்
நினைவுதப்பிப் போன
கனவொன்றின் நீட்சியாக
இருளுக்குள் நிழல்தேடியபடி
ரீங்காரமிடுகிறதொரு சொல்…
துலாபாரக் கட்டங்களுக்கு
நிகர்செய்யவே முடியாதபடி
குளிர்வித்துப் போகிறது
இன்னுமொரு சொல்..
சன்னதத்தின் அதிர்வடங்கி
சரீரத்தின் ஒற்றைச்சுருதியாகிப்
பின்
உயிரோடு பதங்கமாகிப்
போகிறதொரு சொல்…
Very nice👏
Supper athai 👏