கூடு அடைதல்…!!!
மழையில் நனைந்தவாறு
வீட்டிற்குள் நுழையும்
அப்பாவின் கைகளில்
ஒழுகிக்கொண்டிருக்கிறது
மேகத்தின்
கண்ணீர் துளி,
மாலை நேரத்தில்
தன் கூடு அடையும்
சிறு பறவையின்
சிறகுகளில் படிந்திருக்கிறது
காலையில்
பெரிய பறவையொன்று
கொடுத்தனுப்பிய ஒற்றை முத்தம்,
குளிரில்
நடுங்கியவாறு
தெருவோர திண்ணையில் படுத்துக்கிடக்கும்
நாய்க்குட்டியின் காதுகளில்
மெல்ல மெல்ல
கேட்க தொடங்குகிறது
தூரத்தில் அழும்
தன் தாயின் குரல் ,
கடவுளை
காட்டுவதற்காக
கோவிலுக்கு
தோளில்
சுமந்து சென்றார் அப்பா ,
மகனுக்கு
கடவுளை
காட்ட
முடியாமல்
கண்
கலங்க
வீடு வந்து சேர்ந்தார் அப்பா ,
கலங்கி
நின்ற
கண்ணெதிரே
கண்ணாடியை
காட்டி
பாரென்று
கூறினான் மகன்.