ஞெளிர் கேட்க
மனம் பிடித்தமர்ந்தேன்
அது முதுகுக் காட்டி
எதிர் திசையில் நடக்கிறது
பறவைகளின் கீச்சொலி
தூரத்தில் இசைக்கப்படும் பாடல்
நெடுஞ்சாலை அதிர்வலை
துல்லியமான பேச்சரவம்
மனதை களவாடும் தந்திரங்கள்
மனம் நகர்வதில்லை; ஆனாலும்
சார்பியல் கோட்பாட்டில் நகராமல் நகரும்
கிணற்றிலிருக்கும் கற்கள் ஈரத்தை
கசிய விடுவதில் வியப்பேதுமில்லை
புறத்தின் மதுரச மாயை
இடப்பாதம் நகர்த்தினால்
வலப்பாதத்தை உயர்த்தும்
புலன்கள் வெகுதூரத்தில் முகாமிட்டுள்ளது
நெடுதூர பயணத்தில் சிதறிவிழும் காயசித்தி
ஓட்டை பிண்டமதில் ஒயாமல் சேகரித்தேன்
துணைத்தேடும் வளைமுதுகில்
மைல் கல்லின் வெம்மை தகிப்பு
வேய்ங்குழல் நுழைந்து காற்று
வெறுமையின் உச்சத்தில் அகண்டிதமாகும்
சும்மாயிருக்கும் சூட்சமம்
மெல்ல மலர்கிறது
மருத்துவமணை மின்தூக்கிகள்
கசியவிடும் இசையில்
சொல்லும் பொருளும் :
- அஃதை- திக்கற்றவன்
- ஞெளிர்- உள்ளோசை
- அகண்டிதம் – முழுமை