தூயக்காற்றை சுவாசிக்க விதை போட்டு,
செடி நட்டு
வேலியமைத்து
சோலைக்காட்டு பொம்மையாய் நிற்கிறது
வேண்டுதலின் முடிவில்
வெறும் வைக்கோல் திணித்த மனங்கள் பல…….!
மண்வெட்டி கணம் கொண்டு
வெட்டி சாய்த்து
நிலத்தை காயப்படுத்தி
தொடர்ந்து நீர் ஓட
வழிசெய்து மனங்குளிர வைக்கிறான்
சேற்றை புத்தாடை ஆக்கிய
புதிய மனிதா பூமிக்கு வா வானோலி பாடலை பின்னலையில் கொண்ட விவசாயி…..!
நம்பி ஏமாற்றம் பெற்று
மீண்டும் நம்பி மனம் தளர்ந்து
மொத்தமும் இழந்து
கண்ணீர் வற்றி
கை நிறைய மண் ஏந்தி
வாரி இறைக்க இயலாது
தலையில் போட்டு நகர்கிறான்
நம்பிக்கையின் நிழலில் சில நேரம்
பயணிக்கும் துரதி்ஸ்ட மனங்கள்……!
Courtesy : (Artist Name Unavailable)