ஜேம்ஸ் வெப்
சாதனையை மார்தட்டிக் கொண்டு
பூக்கும் பூக்கள் ஏதும்
மலக்குழியில் மடிந்து வீழும் மனிதர்களுக்காக
மனிதாப பூக்களை
பூப்பது இல்லை…
வண்ணத்தால் ஒடுக்கப்பட்டோருக்காக
பூக்கும் பூக்கள் ஏதும் வர்ணத்தால் ஒடுக்கப்பட்டோர்க்காக பூப்பது இல்லை…
என்றோ பூக்கும்
மனிதாபிமானம் கூட
படிநிலை பார்த்து
யாருக்கோ பூக்கிறது…
என் சகோதரன் சகோதரிகளுக்காக
எப்போது பூக்கும்?