1- சந்தேகிக்க முடியாத இரண்டு ரகசியங்கள்
ஜன்னல் வழியாக பூனையைப் போல்
உள் நுழைகிறது வெளிச்சம்
அதே ஜன்னல் வழியாக
எலியைப் போல்
வெளியேறுகிறது இருட்டு
ஒரே அறையில்
அவையிரண்டும் சந்தித்ததில்லை
என்னால் சந்தேகிக்க முடியாத
இந்த இரண்டு ரகசியங்களைப் பற்றி
ஒரு எலியும் பூனையும்
நண்பர்களைப் போல்
விவாதித்துக் கொண்டே செல்கிறது
அதே ஜன்னல் வழியாக.
2
கையேந்துகிறான் அவன்
தட்டில் சில நாணயங்கள்
மகிழ்ச்சியுடன் அவன்
கையேந்துகிறேன் நான்
என் எதிரில் வானம்
சில்லறைக் காசுகளாய்
சில நட்சத்திரங்கள்
வட்ட நாணயம் போல் நிலா
என் ஏட்டில் சில கவிதைகள்
உயரங்கள் மாறுபட்டவை
வாழ்க்கை எப்போதும் போல் சுலபம்.
Courtesy : Art By Myoriginalsin