சிவப்பு, மஞ்சள், பளுப்பு
என எதுவும் நிறுத்தாது அவளை
வடிவற்ற எந்த வடிவிலும்
எந்த தளத்திலும் எப்படியேனும்
ஒரு குதிரையை வரைந்து
உயிரோடு கொணர்ந்திடும்
சாகசக்கார தோழி அவள்
பிடரி மயிர் சிலிர்க்க
கால் தசைகள் அதிர
ஓடியபடியே இருக்கும்
கட்டற்ற அதன் குணமே
தனக்கு பிடிக்கும் என்பாள்
இருபது வருடம் கழித்து
இப்போது தான் பார்க்கிறேன்
இன்னும் வரைகிறாயா என்றேன்.
சவாரி குதிரைகளை
வரைவது தண்டனை என்கிறாள்.
விடுதலைக் குதிரைகளாய்த் திரியும் பெண்கள் மணமான பின் செலுத்துக் (சவாரி) குதிரைகளாய் மாறிப் போவதை, திருமணம் பெண்ணுக்கான கடிவாளமாய் அமைந்து விடுவதை இதை விட நுட்பமாகச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை! வெகு ‘நுட்பமான’ கவிதை!
கவிதைகளில் நல்ல முதிர்ச்சி…
வாழ்த்துகள்