எத்தனை எத்தனை
பறவைகள்
கூடுகட்டி மகிழ்ந்திருக்க
பேரன்போடு
கிளை கொடுத்தது..
சித்தார்த்தனெனும் ஒற்றை
பேரின்பக்கூட்டை மட்டும் பிரித்து…
புத்தருக்கு போதனையும்
யசோதரைக்கு பாதகமும் செய்து..
எல்லோரையும்
திரும்பி பார்க்க வைத்தது
தலைகுனிந்து நிற்கிறது…
குற்ற உணர்வோடு
ஞான மரம்..!!
Art Courtesy : deviantart.com