cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

இலை


தினமும் அவனை 
பார்க்கிறேன் 
சிறுவன்தான் 
கல்லூரி உணவகத்தில் 
கையாள் உத்தியோகம் 
தள்ளு வண்டியை 
இழுத்தபடி மிச்ச இலைகளை 
சேகரித்து கைகளைக் கட்டி 
மௌனமாய் நிற்பான்.. 
அவன் உடைகளில் 
பிரபஞ்சம் கிழித்து 
வைத்திருக்கும்
குடுப்பத்தின் வறுமை 
ஆர்ப்பாட்டம் செய்யும் 
ஏதொன்றும் பேசான் !
அவன் வார்த்தைகளையும் 
நல்ல விலைக்கு 
வாங்கியிருப்பான் 
முதலாளி 
என் அருகில் வருவான் 
என் எச்சில் இலையை 
எடுக்க முயல்வான் 
தடுமாறியபடியே 
தடுப்பேன்.. 
புன்னகைத்தபடி 
பறித்துக்கொள்வான் 
இலையை. 
நானும் பதிலுக்கு
புன்னகைப்பேன்
அவனுக்கு கொடுப்பதற்கு 
புன்னகையைத் தவிர
வேறென்ன இருக்கிறது 
பெறுமதியாய்  

இந்தப்பிரபஞ்சத்தில்..


About the author

வில்லரசன்

வில்லரசன்

சர்வேஷ்வரன் வில்லரசன் - பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இறுதி ஆண்டு மாணவர். இலங்கை கிளிநொச்சியைச் சார்ந்தவர். 2023 ஆண்டு "பசி உறு நிலம்” எனும் கவிதைத்தொகுதியை வெளியீடு செய்து உள்ளார்

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
K.Danuskanth

மிகவும் அருமையான வரிகள் தோழர் மனதைத் தொட்ட வரிகள்…… 💘

Asna sameem

மேன்மேலும் கவி புனைய வாழ்த்துக்கள் நண்பா..

You cannot copy content of this Website