அம்மாவின் குரல்
வெளி
மழை
வாசனை
துளிர்
இருள்
சோலை
நதியோசை
பூப்பூக்கும் மெல்லிய
இசை
ஒளிந்து கொள்ளும்
தவளை சப்தம்
குறளி பிசாசு மறு அவதாரம்
கசாப்பு ஆட்டின் ஈன குரல்
அம்மாவின் குரலில்
அத்தனையும்
ஒளிந்து உள்ளது.
புத்த பூனை
அரண்மனை
கதவை சாத்தி இருந்தால்
பூனை உள்ளே போயிருக்காது
உள்ளே போன பூனை
எலிகள் பிடிப்பது மூலம்
ஆசையை சித்தார்த்தன்
கற்று இருக்க மாட்டான்
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என
பூனை முகத்தில் கீறல்
ஏற்பட்டு இருக்காது
ஆசை துறந்த பிக்கு போல்
தோட்டத்தில் பூச்செடிகளை
சுற்றி வரும் பூனை.
Courtesy : painting – catinatux.tumblr.com