cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

நான் என்பது..


என்னை ஒரு பரிசுபொட்டலமாக
பரிசளிக்க விரும்புகிறேன்.

நாள் முழுக்க ஒரு பைத்தியக்காரியைப்போல
என்னை தேடியலைகிறேன்

கொஞ்சம் கவிதை
அள்ளியெடுக்கும் நதி
அதன் மீதான காதல்
காதலில் அடியில் விழுங்கி கிடக்கும் கூழாங்கற்கள்.
ஒரு நிலா
நிலா தேய,
அதன் வியர்வை துடைக்கும் முகில்
தொங்கட்டாண்கள் அசைக்கும் காற்று
இரவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இசை
இத்தனையும் சேர்த்து
என்னை சுவாரசியமிக்கவளாக குழைத்தெடுக்கிறேன்…

ரிப்பன்களால் கட்டப்பட்ட என்னை
எனக்கு நானே பரிசளித்துக்கொள்கிறேன்.


 

About the author

தினுஷா மகாலிங்கம்.

தினுஷா மகாலிங்கம்.

இலங்கையைச் சார்ந்தவர். ஆவநாழி, கதிர்ஸ், ஆதிரை தமிழ் நெஞ்சம் இதழ் மற்றும் இலங்கையின் காற்புள்ளி சஞ்சிகை உள்ளிட்ட இதழ்களில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website