எனக்கு இரு முகங்கள் உண்டு..
உங்கள் முன் குழந்தையாய் சிரிக்கும்
நகைச்சுவை பேசி மகிழ வைக்கும்
நடிக்கும், பாடும், நடனமாடும்,
மறக்கமுடியாத தருணமாக மனதில் பதிந்துவிட்டுப் போகும்
என் முதல் முகம்..!
விடிந்தது தெரியாமல் விழித்திறந்தே தூங்கும்
தனியறையை மூடிக்கொண்டு கத்தும், கதறும்
கண்ணாடி முன்னாடி கண்ணீரால் காயங்கள் பேசும்
துக்கம் தாளாமல் தூக்கில் தொங்கத் துடிக்கும்
என் மற்றொரு முகம்.!
உங்களுக்கு எப்போதும் பிடித்துவிடுகிற
முகத்தில் மாட்டிவிட்டழகு பார்க்கும் இளக்காரமான,
பைத்தியக்காரத்தனமான முகமூடியே
நான் நினைத்துப்பாக்காத
நிரந்தர மூன்றாவது புதிய முகம் !