விதவிதமாய்
பிம்பச் சில்கள்,
பட்டு எதிரொலிக்கிறது
விரிந்து மிதக்கும்
கடுங்காய் ஒன்று.
அதன் நெடியிலும்
வதைக்கிறது கசப்பு.
அது
வசைகளும் ஏளனங்களும்
ஆசையும் விகல்பமும்
சுமந்த குளிர் பயணம்...
செம்மை வழியும் கைகளுடன்
இந்தச் சில்களையெல்லாம்
தூளாக்கி,
காய்களை பழம் செய்வதாய்
பழைய கனவொன்று
துரத்துகிறது!
ஆம்
வசைகளும் ஏளனங்களும்
ஆசையும் விகல்பமும்
சுமந்த குளிர் பயணம்…
இவ்விரு நிலைகளுக்கிடையே
கதகதப்பாய் மின்னுகிறதொரு
செம்பிழம்பு!
பிரேமையற்று விரிந்த குழல்
தரையுரச சுழன்றாடி அதை
நான் குடிக்கின்றேன்.
ஆனால்
நீ ஏன் எரிகின்றாய்?
செம்மை டா. வாழ்த்துகள் கண்ணம்மா.