நான் நெடுந்தூரம் கடந்து வந்துவிட்டேன்
நீயோ என் அருகிலேயே இருப்பதாக
ஒரு பொய்யைச்
சொல்லிக்கொண்டுதிரிகிறாய்
என் வானத்திலிருந்து உதிரும் நட்சத்திரங்களைப் பூக்களாக்கி
நடு இரவில்
பூனையைப் போல் திரியும் உன்னிடம் அள்ளிக் கொடுத்து விளையாட அனுமதி கொடுத்து விட்டபின்
நானும் சிறு குழந்தையாகி விடுகிறேன்
இந்த வானமும் பூமியும்
சாட்சிகளாய் இருக்க…
நாம் இப்படியே இருந்து விடுவதில் தவறொன்றும் இல்லைதான்
ஆனாலும் ஒரு எச்சரிக்கை !
இந்த இரவை பகலாக்காமல்
பார்த்துக்கொள்வது யார்?
என்பதில்தான் சிக்கல் இப்போது.