cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

கருணை அளவு

ரம்யா
Written by ரம்யா

“அருகம்புல்
குத்திவைத்த
கையளவு
சாணிப் பிள்ளையாருக்கு
பத்திசூடம்
காண்பித்து..
கவண்டப்பாருக்கு
நேர்ந்துவிடப்பட்ட
மயில் கழுத்துநிற
சேவலொன்றை
மஞ்சள்நீர் தெளித்து
அறுப்பதற்கான
ஆயத்தங்களை
தொடங்கும் அப்பா..
துள்ளாமலிருக்க
கால்களையும்
இறக்கைககளையும்
அழுத்திப்பிடிக்கச் சொல்கிறார்..
அதன் கழுத்து அறுபடும்போது
கண்களை மூடிக்கொள்ளும்
அளவிலிருக்கிறது
என் கருணை..!”

About the author

ரம்யா

ரம்யா

ரம்யா திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சார்ந்தவர். "தங்கமங்கை", "தொழில் நண்பன்" மற்றும் "தமிழக மாணவர் வழிகாட்டி" ஆகிய மூன்று இதழ்களில் நிருபராக பணிபுரிகிறார். நேர்காணல்கள், அரசியல் மற்றும் சமூக கட்டுரைகள், திரை விமர்சனங்கள், நூல் விமர்சனங்கள் ஆகியன எழுதி வருகிறார். முகநூலில் எழுதிய "பத்தரக்கார்" என்ற உரைநடை கவிதைதான், முதன்முதலாக அச்சில் வந்த இவர் எழுத்து. அதன் காரணமாக கவிதைகள் எழுதுவதில் தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website