எலிப் பெட்டி
மட்டைத்தாள் பெட்டியொன்றுக்குள்
பல வருடம் வாழ்ந்து
நன்றாகவே அனுபவித்தோம்
என்று சொன்ன
எலிகளின் கூட்டம் வெளியேறியதும் பெட்டிக்குள் நுழைந்த கரப்பான் பூச்சிகள்
அதைவிட அனுபவித்ததாக பெருமை கூற இயலவில்லை.
காரணமிருக்கிறது
அது தன்னுடைய பெட்டியுமல்ல
யாரோ ஒரு மனிதன் தன் உழைப்பில் வாங்கிய ஒரு பொருளின் பெட்டி.
எலிகள் வாழ்ந்தபோதே
குறித்த பெட்டி
ஓர் ஆரோக்கிய நிலையில் இருக்கவுமில்லை.
புத்தகங்கள் என்பது
படித்து வைத்த புத்தகங்களை
மீண்டும் ஒழுங்குபடுத்த
அலமாரி விரும்பவில்லை.
அலமாரி பூச் செண்டுகளை விரும்புகின்றது.
இப்போது புத்தகங்களை
ஒரு பெட்டியில் ஒழுங்குபடுத்துகிறேன். கரப்பான்களின் தொல்லைகளை
மனைவி பட்டியல்படுத்தும்போது
எதற்குத் தொல்லை என எண்ணுகிறேன். பூச்செண்டுகளைக் கொள்வனவு செய்ய மனசு விடவில்லை.
புத்தகங்களை மீண்டும்
ஒழுங்குபடுத்த முயற்சிக்கையில்
இன்னும் சில புத்தகங்கள் ஒன்று சேர்ந்தன.
வாசிக்கின்ற போது
பூச்செண்டுகள் விரிந்து மணத்தன.