வானத்தைப் பார்த்து
பறக்க நினைக்கிறேன்
வாழ்க்கையை சிறகென
கையில் கொடுத்தனர் பெற்றோர்
என் கேள்விக்கு
பதில் இல்லாத இடத்தில்
தாழிடப்பட்டது புதியதோர்
அரிகாரம் பூசிய மொழி
ஒற்றைப் பருக்கைக்கு
முழுங்கால் முழுதும் சேறு
வரப்பு இருப்பதால்
வண்ணமாகிடாது வேறு
தடம் பதித்த இடத்தில்
இன்றும் சிறு ஈரம்
பயமென்பதை வெற்றியாக
மாற்றியவர் பாதத்தில்
உறவுகளின் பார்வை
வௌவாலின் தலைகீழி
இருளை கிழிக்கும்
அறியாமை உயிரினமாய்.