பஞ்சில் வெந்நீர் தொட்டு
நகப்பூச்சு கலைந்தான்
விரல்களைச் சொடுக்கி
நீவி விட்டான்
இடைப்பட்ட மெட்டியில்
துரிதமாய் இதழ் பதித்தான்
இடக்கையில் உட்பாதம் பற்றி
வலக்கையில் வெடிப்புகள் தடவ
மூடித் திறக்கும் என் இமைகளின்
இடைவெளியில் ஒளிர்ந்தது யாமம்.
ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டு
கொலுசின் மணிகள் ஒலிக்க
உள்ளங்காலின் மென்மையில்
அவன் ஈரமுத்தம் வைத்த நொடி
இமைகள் மெல்ல மூட
பின்னோக்கி நிமிரும் கழுத்தில்
நரம்புகள் தெறிக்க..
நிற்க!
பிறகு நான் அவன் முகத்தை
அந்நட்சத்திரங்களில் பதிக்கத் தொடங்கினேன்.
கவிதையும் குரலும் : வித்யா.மு