அகிலம் சுமப்பவன்தான் அப்பாவுக்குப் பிடிக்கும்
சைக்கிளில் பள்ளிக்கு அப்பாவுடன் வருவது தனிவிமானத்திற்கும் ஈடாகாது
எண்ணெய் ஊற்றுவது அண்ணன்
துடைப்பது எங்கள் பணி
பஞ்சர் ஒட்டிய அண்ணன் எங்களுக்கு விஞ்ஞானி
புதுசீட்டும் மணியும் பட்டையும் குங்குமமும் ஆயுதபூஜையும் தீபாவளிதான்
குரங்குபெடல் முடித்து சீட்டுக்கு வந்தவுடன்
பறவையாய் மாறி லாரியில் மோதியதும்
நடந்ததெனக்கு (‘சாவறதுக்கு என் வண்டியா கெடச்சது)
நிறுத்தத்திலிருந்து வீட்டுக்கு வந்தவர்
அலுவலகத்திற்கும் ஆரம்பித்தார் தினமும் பல மைல்கள்
மிதித்த கால்கள் ஓய்ந்த போதும் பைகள் மாட்டி தள்ளி வருவார்
துள்ளத்துடிக்க தோட்டம் போனதும் சைக்கிளும் போனது துருப்பேறி.
அற்புதமான கவிதை தோழர்