இப்போதெல்லாம்
விஸ்தாரமான உப்பரிகையை விட்டுவிட்டு
சிறு மரப்பொந்துக்குள் அடைகிறது
என் கிளி.
உண்மையில்
எதுவுமே இல்லாத
காலமொன்று இருந்தது
அவ்வளவு அமைதியாக
அவ்வளவு நிறைவாக.
கட்டாயம் ஒருநாள் உன்னை தண்டிப்பேன்
நீ நிகழ்த்தும் எந்த நாடகம் போலன்றியும்
கட்டாயம் தண்டிப்பேன்
கருணையோடு நீளும் உன்கைகளை
தீர்க்கமாய் தட்டிவிட்டு
அன்று என்வழியில் நடப்பேன்.
காற்றுக்கு படிந்த தூசியை
தட்டிவிடுவது போல
அலட்சியமாகவே இரு போதும்
தொட்டால் நோகுமொரு
மலரைப்போல் கையாளதே
அந்த கவனம் கனக்கிறது.