யானையின் வாழிடங்கள்,
வீட்டு சுவரெங்கும்
குழந்தைகள் வரைந்த
பல மரங்களின் வரைப்படங்கள்
இரவு நேரம்
தூக்கத்துக்குள் நுழையும் குழந்தைகளின்
கனவுகள் முழுவதிலும் ஆக்ரோஷமாக
பிளிர்கிறது
காட்டை இழந்த யானை.
இரவில் பூக்கும் பூ,
கருமை நிறம்
பூசிய இந்த கார் இருளிலே பயணிக்கிறது என் மிதிவண்டி
பயணமாகிய
சாலையெங்கும் சிதறிக்கிடக்கிறது
மின்மினி பூச்சிகளின் ஒளி வண்ணம்,
தூரத்திலிருந்து
சத்தம் கேட்க
திரும்பி பார்க்கிறேன்
வழி தவறி
நிற்கிறது பகலை
கண்டிராத நிலா வெளிச்சம்.