cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

பண்டிகை


பிரம்ம முகூர்த்தத்தில்
ஈக்கள் மொய்க்க
ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு அடியில்
தலைகீழாய்த் தொங்கும்
ஆவின் தசைகளின்
தரிசனம் காண ஆளுக்கோரு பையோடு
படையெடுத்துப் போவோம்
பண்டிகை நாட்களில்

கத்தியின் போக்கில் வடிவமான
வெவ்வேறு வடிவங்களை
தராசில் ஏற்றி
கொஞ்சம் ஈரலும் சேர்த்து
பாலித்தீன் பைகளில் கட்டிவருவோம்

வெட்டப்படும் எலும்பு மஜ்ஜைகளின் சத்தங்கள்
நாளை தெருவில் இறைந்துகிடக்கும்
கால்சியம் துகள்களென
சூப்பு எலும்புகளை இலவசமாகப் பெற்றுவருவோம்

தூரத்து வானில்
காரிருளை கதிர் விழுங்கிச் செரிக்கும்படிக்கு
கொஞ்சம் வாழ்வு இனித்திருக்க

சூடான எண்ணெயில்
இஞ்சி பூண்டோடு மசாலாவில்
திமிறிக் கொதிக்கும் கறியும்
சப்புக்கொட்ட தின்னும் கொழுப்பும்
இரைப்பையை மகிழ்வூட்டும்
மாபெரும் சுவையென
மிருதுவான ஈரலைத் தீயில் வாட்டிக்கொண்டிருப்போம்

பல்லிடுக்கில் சிக்கக்கொண்ட
கறியின் துகளை மீட்டெடுக்க
பல் குத்தியபடி

வறுத்த
புரோட்டீன் புலால் கொண்டு
எப்போதும்போல
பண்டிகையைக் கொண்டாடி உறங்க வைப்போம்.

About the author

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website