cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

அந்தர அரவம்


தன் தேசத்திலிருந்து 

இன்று காலை விமானத்தில் பயணப்பட்டு

வெளிநாட்டின்

முந்தைய நாளின் இரவில்

இறங்குகிறவன்

மறுநாள் காலையில்

ஒரே தேதியிட்ட இரு காலைகளை

வாழ்ந்தவனாவான்.

 

ஒன்றில் 

செல்லமான முத்தங்கள்

மற்றதில்

செல்வத்திற்கான யுக்திகள்.

 

இரண்டுக்கும் நடுவிலான

இந்த இரவு

ஒரு அரவத்தின்

லட்சணங்கள் நிறைந்தது… 

அது பாதியுடலால் 

வசிக்கும் மரக்கிளையை

இறுகப்பற்றியும்

மீதியுடலால் 

இரையை குறிபார்த்தும் 

அந்தரத்தில் ஆடியபடியிருக்கிறது.


இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள  Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.

 

 

About the author

ரம்யா அருண் ராயன்

ரம்யா அருண் ராயன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி. ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி”- ஐ வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website