cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

அன்பிலி


மலையின் குளிர் நிழலென மூங்கிலின்
விரி தோள்களைக் கொண்ட தலைவனோடு,
தோகையின் மின்னிடும் கண்களாய்ச் சுடரும்
காந்தளின் இதழ் சூடி,
அன்புடைய
நெஞ்சம் போல
நாளும் மகிழ்ந்திருக்கும்…
மெல்லியவள் அவள்

அவன் மன அகழியின் அகலம்
இந்த அகிலத்தை விடப்பெரிதென்று யாவர்க்கும் தெரிந்த போதும்

கொதித்தெழும் அடலையின்
நிலைக்களத்தை
விரிந்த விழிகளோடு காணும் கொடிச்சியின்
மனத்தவிப்பு
அடவியில் ஓர் ஆலாபனை

ஆதாரமற்ற சொற்களின் கடினம்
மணற் துகள்களாய்,

பாதத்தில்
கொடும் வெய்யில் எனப் படரும்,
தனிமையின் இறுதி சாளரத்தை
தணல் கொண்டு அடைக்கிறாள்

தொடரும் அன்பிலியின்
அசைவு,
ஓர் பேரொலி
மற்றும் அவள்
உயிர் கொல்லா பெருவலி
என்பது அவள் அறிந்தது தான்

இருள் அகற்றும் அநிதத்தின் ஆலாபனையில்
மலரைப் போல இதழ் விரிக்கிறது
யாழின் இசை…


 கவிதை வாசித்த குரல் : சிவநித்ய ஸ்ரீ 

இந்த கவிதையை  Spotify App -லும் கேட்கலாம். 

About the author

அ.ரோஸ்லின்

அ.ரோஸ்லின்

மதுரை மாவட்டம், டி.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இளம் பருவத்திலேயே கவிதை இயற்றும் திறன் கொண்ட இவர், கல்லூரி பருவத்தில் தனது முதல் கவிதையை எழுதினார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும், வரலாறு,கல்வியியல், போன்றவற்றிலும் பட்டங்கள் பெற்றவர். இவர் கவிதைகள் பெண்ணின் அக உணர்வுகளையும், உறவின் நெருக்கடியையும் மிக நேர்த்தியாக பேசுபவை. சங்க கால பெண் புலவர்களுக்கு இணையான கவியாளுமையை கொண்டவர். இவரின் கவிதைகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. சுற்றுபுற சூழல் சார்ந்த கட்டுரைகளும் எழுதி வருகிறார். தற்போது அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

படைப்புகள் :
மழை எனும் பெண்- 2011,

அழுகிய முதல் துளி- 2015.

மஞ்சள் முத்தம்- 2015,

காடறியாது பூக்கும் மலர்- 2017,

ரோஸ்லின் படைப்புலகம் (2017),

பயணத்தின் மொழி (2020)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website