cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்


  •  நிழல்களைக் கடந்து செல்லும் வெயில்

கனவுகள்  சுரந்து  கொண்டிருக்கின்றன
காட்டாற்று  வெள்ளமாய்  பெருக்கெடுக்கின்றன
நிலமெல்லாம் பீதிகொண்டு நடுங்குகின்றன
என்  உலகம்
எனக்கான  உலகம்
எனக்குள் அந்த   உலகம்
எழுதலாமென  நினைக்கிறேன்
எழுத்துக்களில்லாமல் எப்படி  எழுதுவது  ?
என்  சொற்கள் அவள் வசமிருக்கிறது.
உடலை  அடைய  முயற்சிக்கிறேன்
உடல் தூரதூரமாகவே  விலகுகிறது
உடலைக் கைப்பற்றி விட்டால் போதுமென்றிருக்கிறது.
உதிர்ந்த பூ
உன் வாழ்வு
உன் கனவு.
தோசை துண்டு ஒன்று கிடந்தது
ஆயிரம் எறும்புகள் தின்று  கொண்டிருந்தன
நாயொன்று  எறும்புகளிடமிருந்து தோசையைப் பறித்துப் போனது.


  • காட்சிகளுக்குள் அமிழ்ந்த பூமி

இதயம் என்னும்  சின்ன
சிட்டுக் குருவி
கூடு தேடி அலைகிறது
அடைக்கலம் இன்னும் அகப்படவில்லை
நல்லதோர் ஆனந்த  யாழ்
நலங்கெட
புழுதியில்
எறியுண்டதே  ?
தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது
இருளைத் தாண்டித்தாண்டி நடக்கிறேன்
மனசுக்குள் வெளிச்சம் துளிர்க்கிறது
இறந்து போனாய்
பிறந்த தினம் வந்து போகிறது
நினைவுகளால் நிரந்தரமாக  வாழ்கிறாய்
அலைகள் கரையைத் தேடி வருகின்றன
கரைகள் நெருங்க விடாமல் துரத்துகின்றன
காட்சிகள் மாறாமல் தொடர்கின்றன.


Art Courtesy : de.shein.com

About the author

வசந்த தீபன்

வசந்த தீபன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website