cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

கொல்லும் இசை


ஒருநாளில்
ஒருமுறையேனும்
உனதும் எனதுமான
பழைய பதிவொன்றுக்கு
யாரோ ஒருவர்
விருப்பிட்டுச் செல்கிறார்

மெலிந்த பிளாஸ்டிக் பிடிகளில்
நீருறிஞ்சிய சொண்டின் முன்
விரல் நுனியில் மின்னும் பொன்னும்
வண்ணம் குழையாத காலடிக் குளிரும்
முகம் மறைத்து இசைக்கும் முதுகுப் பாடலும்
இல்லாமை குறித்து
வருத்தமுறுகிறேன்

விஷமேறிக்கொண்டிருக்கும்
இசையின் ஆர்ப்பரிப்பு
மெல்ல எழுந்து
அகாலத்தை உசுப்பும் போதெல்லாம்
நகைச்சுவை பதிவுகளைத் தேடி எடுத்து
நிலைத்தகவலாய் வைத்து
இந்த உலகுக்கு எதையோ
நம்பச் செய்கிறேன்

நான் நானாக இருந்த
இறுமாப்புகளின் மிச்சம் எது என்று
ஒவ்வொரு முறையும்
பகடை பார்க்கிறேன்

நள்ளிரவு நாய்களின் ஊளைக்கும்
நடந்து முடிந்த ஆட்டத்திற்குமான நேர்கோடொன்று
ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துசெல்வதை
காய்கள் நிச்சயிக்கின்றன.


கவிதைகள் வாசித்த குரல் : தேன்மொழி அசோக்
Listen On Spotify : 

About the author

ரிஸ்மியா யூசுப்

ரிஸ்மியா யூசுப்

இலங்கையின் வெளிமடை பிரதேசத்தைச் சார்ந்த ரிஸ்மியா யூசுப் அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பேராதனைப் பல்கலைகழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டத்தையும் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ”சொல்லில் சரியும் சுவர்கள்” தமிழ்நாட்டிலுள்ள கடல் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி உள்ளது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Pradeesh

கவிதை மிகவும் நன்றாக உள்ளது. ஆசிரியரே… கவிதை வரிகள் உன்னதமாக இருக்கின்றது. அதனை கேட்பதற்கு இனிமையாக உள்ளது…

You cannot copy content of this Website