நீண்ட வெள்ளைத்தாளென
தொடங்கும் பகல் பொழுதில்
வெயில் என எழுத
வியர்வையில் ஊறும்.
மழைநாட்களில் ஈரப்பதமேறி
மை கசியும்.
வசந்ததின் வரவை
மலர்த்திப் பதியனிடும்.
குளிர்க்காலை உதயத்தில்
வெடவெடக்கும்
இந்த சொற்களுக்குத்தான்
எத்தனை ஒப்பனை
கவிதை வாசித்த குரல்: தேன்மொழி அசோக்.
Listen On Spotify :
சொற்களைக் கொண்டு கவிதை எழுதித்தான் பார்த்திருக்கிறேன். முதன் முறையாக சொற்களைப் பற்றியே ஒரு கவிதை!! அசத்தல்!
அருமை