அவர்கள் கிசுகிசுக்கிறார்கள்
வெப்பம் திங்கத் தொடங்க
வானத்தில் ஏறிக் கொண்டு
நீல மழையை
அனுப்பி வைக்கிறேன்
அம்மா
தொப்பலாக
நனையத் தொடங்குகிறாள்.
கத்தியை வைத்து
விசத்தை
உறுஞ்சித் துப்பிக் கொண்டிருப்பவனிடம் தான்
அடிக்கடி சண்டை போட்டிருக்கிறேன்
நீல நிறக் கைகளை
முதல் முறையாகப்
பாரக்கிறேன்
கடைத் தெருவிலிருந்து
வந்த அம்மா
மேலே விழுந்து அழுகிறாள்
பானிப்பூரி கடைக்கு போகலாம்
என்று
தோழியிடம் சொன்னது
மங்கலாக நினைவிருக்கிறது
அது ஒரு அற்பத்தின் அல்லது நீங்கள் நினைப்பது போல
பசியின் விளையாட்டு
உச்சுக் கொட்டும்
தொண்டைகளில்
நாகமாணிக்கம் உருள்கிறது
விசத்தின் அன்பு
இன்ன பிறவான அனைத்தும்
அல்லது
கடலில் ஒரு நாகம் அதுவே
நிலத்தில் மாணிக்கம் கக்குகிறது
தேடாதே
என்னுடல் உன் ஆதி ஞாபகம்
இப்படித்தான்
தீண்டுவதும் தீண்டதகாததும் ஆன காலத்தில்
பல்லாயிரம் இரவுகள்
முடிந்து போயிருக்கக் கூடும்.
கவிதைகள் வாசித்த குரல் : தேன்மொழி அசோக்
Listen On Spotify :