அழுத்தமான முத்தங்களால் முதலில் கால்களை இழந்தது
செல்லும் இடமெல்லாம் கூடவே வாஞ்சையுடன் அழைத்துச் சென்றதில்
இரு கைகளையும் இழந்தது
அதனைக் குளிக்க வைத்து அழகுகூட்டியதில் உடலை இழந்தது
குழந்தையின் தீராத அன்பு
பொம்மையை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல தொடங்கியது
இனி மிச்சம் இருப்பது தலை மட்டும் தான்
இன்னும் குழந்தைக்கு பொம்மையின் மீதுள்ள அன்பு கொஞ்சமும் குறையவில்லை.