cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

சுகன்யா ஞானசூரி கவிதைகள்


த்தனை வெய்யில்
எத்தனை மழை
எத்தனை பனி
அத்தனை நினைவுகளோடும்
அலைவுற்றபடி வருகிறதா
உதிரும் ஒற்றையிலை.

ன்னும் நீண்ட தூரம்
நாம் செல்ல வேண்டும்
நண்பா
திரும்பி வருவோமா தெரியாது
இப்படி உன் காலணிகளைக்
கழட்டிவிடு
உன் துவக்கினையும்
வெறித்துக் கிடக்கிறது வானம்
வெண் பொதிகளற்று
வறண்டு கிடக்கும்
இக்காட்டாற்றின் மீது
ஒரு கிளித்தட்டை
ஒரு கிட்டிப் புள்ளை
ஆடு புலி இல்லை சொக்கட்டானையாவது
விளையாடிச் செல்வோமே
இறுதியிலும் இறுதியாக
இங்கே பார்
யாரோ இருவரின் சிதைந்த கூடுகள்
நம்மைப் போல் யாரோ
நமக்கு முன் சென்றவர்களாக இருக்கலாம்
நண்பா
உனக்கு கேட்கிறதுதானே
என் குரல்
விளையாடிக் கொண்டிருந்த
சிறுவர்கள்
சிதைந்து போனதாக எழுத முடியவில்லை
வாருங்கள்
நாம் அடுத்த
கவிதைக்குப் போகலாம்.

About the author

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website