பார்வையற்ற
ஒருவரின்
பாடல் ஏந்தி
பயணிக்கிறது ரயில்.
ஒளி கைவிட்ட
அவர் உலகை
சுவீகரித்து
கொண்டது
மெல்லிசை.
தன்
அரூப விரல் கொண்டு
அது திறக்க முயல்கிறது
இதயத்தின் அறைகளை
புலன் ஒன்று மரித்தவர்
இப்போது
உயிர்தெழுகிறார்
வெவ்வேறு செவிகளில்.
குறையொன்றுமில்லை.