நான்
நானாகிய பொழுதுகளில்
இறந்தகாலத்தை
சிலாகித்துக் கொண்டிருந்தேன்…
இது
நிகழ்காலம் என்ற
நினைவுகளை மறுத்தது
நினைவெல்லாம்
இறந்தகாலத்தை
உயிர்ப்பித்து
நினைவறைக்குள்
அமர்த்திக்கொண்டிருந்தது…
கண்ணிலிருந்து
கன்னம் உதட்டுவழி
வெகுதூரமில்லை
கண்ணீர்த் திவலைகள்
தேம்பி விழுவதற்குள்
கைவிரல்கள் பரிவோடு
தடுத்து நிறுத்தின…
நிகழ்காலத்தில்
நிலைகுத்தி நின்றன
கண்கள்
நினைவு திரும்பிய
குழந்தை மனம்போல்
சுழன்று சுதாரித்த மனம்
பெருமூச்சோடு
எதிர்காலம் பற்றிய
எண்ணங்களை
சேகரிக்க மெதுவாய்
நடக்க ஆரம்பித்திருந்தது
அன்பின் கரங்களைப்பற்றியபடி!