ஒருவனிடம் கூட
உன் சாயல் இல்லை.
மறத்தலில் அசதி தட்டி நிற்கும்
யாரும் சீண்டாத பனை மரமாய்
உன்னை விலகி தூரமாய்
நிற்கிறேன்.
தூரம் ஒரு விதமான ஆசுவாசம்.
அடிக்கடி நீ தூரம்
போகிறாய்.
நான் அருகில் வருகிறேன் .
மண்ணின் நிறத்தைப்
பற்றி இருக்கிறேன்.
இன்னும் பல லட்சம் ஆண்டுகள்
ஆகலாம் -நிறம் மாற,
நான் நானே தான்.
உன்னையும் நீயாகவே எண்ணிக்
கொள்கிறேன்.
இலை தனது காய்தலை
வலிந்து நிகழ்த்துகையில்
தனக்கு
வெயிலில்லா நிலையை
உருவாக்க எத்தனித்தது.
முழுதும் உறைந்த காட்டில்
பூச்சிகளின் பிண வாடை,
மீன்களின் பிண வாடை,
அணில்களின் பிண வாடையென
காடே நாற்றத்தின் பிடியில்.
நீரோடு ஒட்டிக் கொண்டிருந்த
தட்டானின் படிமங்கள்
பனிக் காடெங்கும் விரவிக் கிடக்கிறது.
முயன்றும் இயலாததுமான
ஒரு சம்பிரதாயத்தில் ஊறிக் கிடந்தது
காடு.
மனிதர்களின் நடையை
தன்னில்
அனுமதித்தது முதல்
தன்னைத் தொலைத்தது வரை
காடு தான் பொறுப்பு.
அதன் இருக்கையைக்
கட்டி வானில்
எறிந்து விட
நிலமும் நீரும்
காடற்ற அனாதைகள் ஆயின.
காடுகளற்ற நிலம்
இப்போது
நீரற்ற உடலாய் …
உப்பற்ற கடலாய் ….
Image Courtesy : http://wolfdancer.tumblr.com/
மண்ணின் நிறத்தைப்
பற்றி இருக்கிறேன்…
இன்னும் பல லட்சம் ஆண்டுகள்
ஆகலாம் நிறம் மாற
நான் நானே தான்.
உன்னையும் நீயாகவே எண்ணிக்
கொள்கிறேன்
சிறப்பு 💝