கடல்
சூரியனை முத்தமிடும் ஒளிக்கற்றைகள்
துவக்கி வைக்கும் தேவலோக நடனத்தில்
துவங்கியது அந்நாள்.
செவி வழியே வீசும் காற்றின்
கிசுகிசுக்கும் ரகசியங்களுடன்
கண்முன்னே விரிகிறது
கதைகள்.
நுரை படிந்த அலையின் சிகரத்தில்
மூழ்கும் மனதை
உயிர்ப்புடன் மீட்கிறது
கடலின் இதயத்துடிப்பு.
மணலில் கரைந்து போகும்
கடலின் எல்லைகள் போல
மனதில் கரைந்து போகின்றன
கவலைகள்.
அலைகளின் அரவணைப்பில்
நுரைகளுடன் பொங்கும் கவலைகள்
கரைகளில் ஒலிக்கிறது
சிம்பொனி.
இதோ மணலில் தெரிகிறது
காலத்தின் காலடித் தடங்கள்
ஒவ்வொரு அடியும்
ஒரு நினைவு
ஒரு கணத்தின் பாடல்.
அலைபோல் மனம் எழும்
காலம் நெருங்கும்
அதன் முடிவில்லாத அர்த்தத் தேடலில்
வாழ்க்கையின் சிம்பொனி
அங்கு ஒவ்வொரு கணமும் பாடுகிறது.
சேலை மடிப்பில் விரியும் வானம்
அவளின்
அழகிய சேலை மடிப்புகளில்,
விரிகிறது என் வானம்.
அதிகாலை வானத்தை
வர்ணிக்கும் வண்ணங்களுடன் பூக்கிறது
அவள் சேலை வரைந்த பூக்கள்.
வழுக்கும் தோள்களின் தேகம் மிளிரும்
அவள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்
ஒளிரும் அவள் ஒற்றைப் புன்னகை
கைப்பற்றுகிறது என் இதயம்.
என் ஆன்மாவை வெட்பப்படுத்தும்
உன் பார்வையில்
என் மனதின் நிதானத்தில்
சறுக்கல்.
மீண்டும் கருத்தரிக்காத
உறைந்த கனவுகள்
அதன் பாயும் நெசவில்
எனை மயக்கும் சேலைத்திரை
இரவின் இருண்ட திரையில்
நட்சத்திரங்களை ஒளிர்கிறது
விரல் நுனி கொண்டு
புகைப்படங்கள் நகர்த்திய பின்னும்
மனதோரம் இன்னமும் அகலாத
அவளது இருப்பு…