அறுத்தெறியப்பட்ட
குறும்பாட்டின் குளம்படிகளில்
தெறித்துச் சிதறும்
குருதித் திவலைகள்
சாம்பிராணிப் புகையும்
பத்தியின் வாடையும்
கமகமக்கும் அத்திக்கு
முன்வேலையில்….
கம்பீர புஜம் கட்டிக்
களரிக்கு வரும் சூரவேசக்காரனைப் போல்
தேரின் வடக்கயிறுகள்
அசைய ஆரம்பித்தன!
தேர்பலி கொடுக்க
தரதரவென இழுத்து வரப் பட்ட
வெள்ளாட்டின் கழுத்து
நரம்பு முறிந்து போவதாய்
எண்ணிக் கொண்ட
மதுரை வீரனின் மனம்
கண்ணீர் வடிக்க
ஆரம்பித்தது…
நெடிய கொடுவாளை ஏந்திக்கொண்ட பூசாரி
ஆட்டின் பிடரியில்
மஞ்சள் தண்ணீர்
தெளித்துச் சிதறிய
சிதறலில் நிரம்பி
வழியும்
அகோந்திரத்தின் வாசனை….