இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடித் தவழ்ந்து
மண்ணில் விழுந்து
கிடக்கிறது
இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடிப் பறந்து
ஆற்றில் விழுந்து
கரை புரண்டு ஓடுகிறது
இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடி
காற்றில் ஆடி உயர்ந்து
பட்டொளி வீசிப் பறக்கிறது
இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடிச் சுருண்டு
கங்கில் விழுந்து
சட்டெனப் பற்றி சடசடத்து எரிகிறது
இலக்கிலா
ஓர்
இலை…
கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :