cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 2 கவிதைகள்

காயத்ரி ராஜசேகர் கவிதைகள்


ருந்தியபடியே உறங்கிவிடும் குழந்தையை விடுவித்து
மடியிலிருந்து
மெத்தைக்கு மாற்றும்
சாகசத்தை
எதிர்பார்த்தது எனது பிழை
புதிய காலணிகளை அணிந்து
பழையதை அங்கேயே விட்டுவிடப் பழகிய உனக்கு
இது ஒரு பொருட்டல்ல
ஆயினும் மிதிவண்டி பிடித்து
நீ கூடவே வருவதாய்
பாவித்த என் முன்
ஒரு சிறு குழியை
இட்டு வைத்த
காலத்தைச் சேரட்டும் பழி.

ரிசனம் தேவைப்படாத
சருகு
பற்றற்று வீழும் கணத்தில் உயிர்க்கிறது
மண்ணோடு உருள்கிறது
மழையோடு புதைகிறது
நதியோடு புரள்கிறது
காலத்தோடு பயணிக்கிறது
சமயங்களில்
மிதி பட்டு நொறுங்கவும் செய்கிறது
யாதொரு புகாருமில்லாமல்.
லது பக்கவாட்டுத்
தொடைப் பக்கத்தில்
கைதுடைத்த நீர்த்திட்டு
கக்கத்திலும் முதுகிலும்
எந்நேரமும் பிசுபிசுப்பு
தொடையிலிருந்து கால்வரை
நமைச்சல் தொடங்கிவிட்டது
தளருடைக்கும்
அத்தனை உள்ளாடைகளுடன்
துப்பட்டா வேறு
நேரமே எழுந்தும்
மின்தூக்கியற்று
இரண்டாவது மாடியேறி
வடகம் பிழிந்து முடியுமுன்
வாய்த்துடுக்குச் சிறுமியாய்
வெய்யில்
உள்ளாடைகள் தெப்பமாக
மாற்றி வருவதற்குள்
ஃபிளாஸ்கிலிருந்து
ஊற்றிக் குடிப்பதையே
பெருந்தன்மையென்பதாய்
வெய்யில் தொனியில்
டிபன் ரெடியா? எனக் கேட்பவன்
அணிந்திருப்பது
ஒற்றை ஷார்ட்ஸ்.

About the author

காயத்ரி ராஜசேகர்

காயத்ரி ராஜசேகர்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website